மதுரை, : மதுரை மாவட்டத்தில் 41 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர்களுக்கு மாவட்ட கருவூலம் மூலம் நேர்காணல் மூலம் வாழ்நாள் சான்று பதிவு மேற்கொள்ளப்பட்டது. அடுத்து அவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவ நிதிக்காக மாதம் ரூ.497 இவர்களின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதையடுத்து காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு அதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்தது. இவ்வகையில் மொத்தம் 38 ஆயிரத்து 150 அடையாள அட்டை வந்துள்ளது. இவற்றை வங்கி கணக்குகளின் அடிப்படையில் ஒரு மாதமாக வினியோகித்து வந்தனர்.
இவ்வகையில் இதுவரை 15 ஆயிரம் பேர் நேரில் வந்து பெற்றனர்.
மீதியுள்ளோருக்கு தபால் மூலம் வழங்க மாவட்ட கருவூல அலுவலர் அண்ணாத்துரை நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் கூறுகையில், ''இதுவரை பெற்றவர்கள் போக மீதியுள்ளோர் அலுவலகம் வந்து அலைந்து திரிவதை தவிர்க்க தபால் துறை மூலம் வீடுகளுக்கே வந்து வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.