கள்ளக்குறிச்சி : சின்னசேலம் மின்வாரிய அலுவலகம் அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திம்மாபுரத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகள் ஜனனி,21; இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மெடிக்கலில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த பிறகு ஜனனி, தன்னுடன் பணிபுரியும் மணிகண்டன்,21; என்பவருடன், பஜாஜ் பல்சர் பைக்கில் வீட்டிற்கு சென்றார்.
சின்னசேலம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்ற போது, எதிர்திசையில் தொட்டியம் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் கணேசன்,50; என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த டி.வி.எஸ்., மொபட் மணிகண்டன் பைக் மீது மோதியது. இவ்விபத்தில் படுகாயமடைந்த மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஜனனி உயிரிழந்தார்.
புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.