விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று இரவு ஆலங்கட்டி மழை பெய்ததால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு திடீர் மழை பெய்தது.
நேற்று காலை முதல் கடுமையான வெயில் காய்ந்தது. இரவு 8:30 மணிக்கு திடீரென குளிர்ந்த காற்றி வீசியது. தொடர்ந்து, ஆலங்கட்டி மழை பெய்தது. ஐஸ் கட்டிகள் தரையில் விழுந்து சிதறின.
விழுப்புரம் நகரம், கோலியனுார் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்தது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.