மந்தாரக்குப்பம் : கடலுார் மாவ்டடம் மந்தாரக்குப்பம் அடுத்த ஊமங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜவேலு, 51; விருத்தாசலம் கிளை எல்.ஐ.சி., முகவர். இவரது மனைவி வரலட்சுமி. செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
இருவரும் நேற்று காலை 10.30 மணிக்கு பணிக்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது வீட்டின் பூட்டை உடைந்து, பீரோவில் இருந்த 23 சவரன் நகைகள், 150 கிராம் வெள்ளி, 1.5 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.