அனைத்து தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்த தமிழக அரசின் பட்ஜெட், அரசு ஊழியர்கள் உட்பட பல தரப்பினருக்கு ஏமாற்றங்களை தந்து சில தரப்பினரது எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது. தொழில் துறையினர் எதிர்பார்த்த சலுகைகள், திட்டங்கள் இடம் பெறவில்லை. 'தகுதியுள்ள' குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 என அறிவிக்கப்பட்டாலும், அந்த 'தகுதி' என்ன என்று அறிவிக்கப்படவில்லை. அந்த சலுகை பெற இன்னும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. தென்மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து அறிவிப்பு ஏதும் இல்லை. பட்ஜெட் பற்றி பல தரப்பினரும் வரவேற்பையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.