விழுப்புரம் : முன்னாள் தலைமையிடத்து துணை தாசில்தார் லஞ்சம் வாங்கிய வழக்கில், விழுப்புரம் கோர்ட் விதித்த தண்டனையை, சென்னை ஐகோர்ட் நீதிபதி உறுதி செய்து உத்தரவிட்டார்.
அப்போது பணியில் இருந்த, தலைமையிடத்து துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், சான்றிதழ் வழங்க, சண்முகத்திடம் 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கினார்.
விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கில் பாலகிருஷ்ணனுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதித்து, 2014ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், பாலகிருஷ்ணன் மேல்முறையீடு செய்தார்.
வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் பாலகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் அபராதத்தை உறுதி செய்து உத்தரவிட்டார்.
விழுப்புரம் அம்மச்சார் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, பாலகிருஷ்ணனுக்கு, தற்போது, 70 வயது ஆகிறது.