நாமக்கல்: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில், நாமக்கல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 'எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சி, இரண்டு நாட்கள் நடக்கிறது.
நாமக்கல் ஒன்றியம், காவேட்டிப்பட்டி பஞ்., நடுநிலைப்பள்ளியில் நடந்த, 'எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம்' நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் கயல்விழி தலைமை வகித்தார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் தேவராஜ், மேற்பார்வையாளர்
சசிராணி ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
அதில், எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் மாணவர்களின் கற்றலுக்கு பயன்படுத்தும் கற்றல் உபகரணங்கள், என் மேடை, செயல்பாடுகளுக்கு பயன்படுத்தும் பொருட்கள், சார்ட் கட்டிங், கிரீடம் பயன்பாடு குறித்து, பெற்றோர்களுக்கு விளக்கப்பட்டது.
தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள், மாவட்டங்களின் சிறப்புகள் கூறுதல், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். ஆசிரியர் பயிற்றுனர் கிருஷ்ணலட்சுமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் உள்பட பலர் பங்கேற்றனர்.