தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ் 47. விவசாயி. தமது தோட்டத்தைச் சுற்றிலும் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக மின்வேலி அமைத்திருந்தார். இன்று அதிகாலையில் மின்வெளிக்கு தரப்பட்ட மின் இணைப்பை துண்டிப்பதற்காக சென்றார் அப்போது தவறி விழுந்ததில் மின்வேலியில் ஷாக் அடித்து அலறினார்.
இவரது அலறவை கண்ட பக்கத்து தோட்டத்து விவசாயி முத்துராஜ் 34 என்பவர் ஓடி வந்து கனகராஜை காப்பாற்றினார். கனகராஜ் காப்பாற்றிய முத்துராஜ் மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். கனராஜ் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மேலும் திருநெல்வேலி கோட்டம் செய்திகள் :
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
Learn more
I agree
X