கோயம்பேடு, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அதிபுல், 44. கடந்த 19ம் தேதி இரவு, கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராமகிருஷ்ணா எடைமேடை அருகில், மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார்.
அவ்வழியே வந்த மூவர், அதிபுலின் மொபைல் போனை பறித்து சென்றனர். கோயம்பேடு போலீசார் விசாரித்து, பாடி குப்பம், அண்ணா தெருவை சேர்ந்த சரவணன், 20, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
நேற்று, அயப்பாக்கம் வி.சரவணன், 23, என்பவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள பாலாஜியை, போலீசார் தேடுகின்றனர்.