தாம்பரம், தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது.
இங்கு, பொது மருத்துவம், குணபாடம், குழந்தை மருத்துவம், நோய் நாடல், நஞ்சு மருத்துவம், புற மருத்துவம், வர்ம மருத்துவம், சித்தர் யோக மருத்துவம் ஆகிய, எட்டு துறைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்நிறுவனத்தில், 2022- - -23ம் கல்வியாண்டின் சித்த மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான கலந்தாய்வு, நேற்று நடந்தது.
இதில் 58 இடங்களில், டில்லியில் உள்ள இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் 29 இடங்களை ஏற்கனவே நிரப்பியது. நேற்று, சானடோரியம் சித்த மருத்துவமனை, 29 இடங்களை நிரப்பியது.