சென்னை, சென்னை கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 24ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, வேலைவாயப்பு முகாம் நடக்கிறது.
இதில் எட்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டம் பெற்ற அனைவரும் பங்கேற்கலாம்.
மேலும், 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. வேலை நாடுநர், தங்கள் விபரங்களை, www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் வீரராகவராவ் அழைப்பு விடுத்துள்ளார்.