விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தப்பியோடிய சிறை கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
இலங்கை திரிகோணமலையை சேர்ந்தவர் அப்துல் முஸ்தபா மகன் ரியாஸ் கான் ரசாக், 39. இவர் மீது கடந்த 2019ம் ஆண்டு மதுரை தெற்கு நகர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
வழக்கு விசாரணைக்காக மதுரை கோர்ட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் சென்னை புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.
நேற்று இரவு 8:45 மணி அளவில் விக்கிரவாண்டி அடுத்த பேரணி கூட்ரோடு அருகே உள்ள இரவு நேர ஓட்டலில் சாப்பிட வாகனத்தை நிறுத்திய போது, போலீசார் கண்ணில் மண்ணைத் தூவி தப்பி ஓடி விட்டார்.
மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது. போலீசார் கைதியை தேடி வருகின்றனர்.