திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி கோயில் பூஜாரி சிதம்பரம் கொலை வழக்கில் அப்பகுதி தங்கபாண்டி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி பேரூரணி சிறையில் இருக்கும் அவரை நேற்று வழக்கு விசாரணைக்காக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் இங்க் பாட்டிலை உடைத்து கையில் நரம்பை கிழித்துக்கொண்டார்.
போலீசார் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜாமீன் கிடைக்காததால் இச்செயலில் ஈடுபட்டார்.