கோயில்
யுகாதி பண்டிகைவிழா: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, சுந்தர பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம், சிறப்பு பூஜை, தலைமை: சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஏற்பாடு: திருமலை நாயக்கர் சமூக நலச்சங்கம், காலை 8:00 மணி.
பங்குனி திருவிழா கொடியேற்றம்: ஜெனகை நாராயண பெருமாள் கோயில், சோழவந்தான், சுவாமி அன்னவாகன புறப்பாடு, காலை 9:30 மணி.
பக்தி சொற்பொழிவு
வசந்த நவராத்திரி உற்ஸசவம், மோட்ச சந்நியாச யோகம்: நிகழ்த்துபவர் -- சுவாமி சிவயோகானந்தா, காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, மாலை 6:30மணி.
பாண்டுரங்க மாகாத்மியம்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, நிகழ்த்துபவர்: ஜலேந்திரன், மாலை 6:30 மணி.
திருப்புகழ்: நிகழ்த்துபவர்- விஜயராமன், மதுரைத் திருவள்ளுர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
ராமாயணம்: நிகழ்த்துபவர் - என்.எம்.ஆர், கல்லுாரி உதவி பேராசிரியர் துர்காதேவி, கீதாபவனம், சீதாஹால், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி, காந்தி மியூசியம், மதுரை, பொருள்: கீதை காட்டும் வாழ்வியல் நெறிகள், தலைமை: தேவதாஸ், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனர், காலை 10:00 மணி.
மருத்துவம்
சர்வதேச பெண்கள் தின சிறப்பு பரிசோதனை பேக்கேஜ்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, காலை 7:00 மணி.
பொது
அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பழங்கா நத்தம், மதுரை, ஏற்பாடு: பன்னீர்செல்வம் அணி, காலை 10:00 மணி முதல்.
உலக தண்ணீர் தின கருத்தரங்கு: தி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ், சர்வேயர் காலனி, மதுரை, தலைமை: சுற்றுச்சூழல் ஆலோசகர் வெங்கட்ராமன், மாலை 6:00 மணி.
* நமோ ஆப் பதிவிறக்க கருத்தரங்கு: பா.ஜ.., அலுவலகம், பீ.பி.குளம், மதுரை, பங்கேற்பு: பா.ஜ., பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், ஏற்பாடு: நகர் பா.ஜ., காலை 9:00 மணி முதல்.
உலக தண்ணீர் தின ஆரத்தி விழா: தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம், மாலை 6:00 மணி.
கால்பந்து போட்டிகள்: எஸ்.ஆர்.ஜி., இன்டர்நேஷனல் பள்ளி, முத்துப்பட்டி, அவனியாபுரம், மதுரை, காலை 6:00 மணி முதல், பங்கேற்பு: சந்திரசேகர், ரயில்வே துறை, பரிசளிப்பு, மாலை 5:30 மணி,
மகளிர் தின கொண்டாட்டம்: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, வடக்குவெளிவீதி, மதுரை, பங்கேற்பு: உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணவேணி, ஏற்பாடு: அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம், காலை 10:30 மணி.
முற்றுகை போராட்டம்; பம்பிங் ஸ்டேஷன், பெத்தானியாபுரம், மதுரை, போக்குவரத்துக்கு இடையூறான பம்பிங் ஸ்டேஷனை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல், ஏற்பாடு: மார்க்சிஸ்ட் கட்சி, காலை 8:00 மணி.
கண்காட்சி
சலுகை விலையில் ஆடைகள் கண்காட்சி, விற்பனை: ேஹண்ட்லுாம் ஹவுஸ், 154 கீழவெளி வீதி, மதுரை, காலை 9:00 மணி முதல்.
மானசரோவர் ஆடைகள் கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே., நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல்.
சத்யா ஏ.சி., கண்காட்சி தள்ளுபடி விற்பனை: ராஜ்பேலஸ், மார்க்கெட் ரோடு, நாகமலை, மதுரை, காலை10:00 முதல்.