திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த கருந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆடு மேய்க்கும் தொழிலாளி, திருவேங்கடம், 30, மற்றும் செங்கல் சூளை தொழிலாளி ரமேஷ், 40; நேற்று முன்தினம் மாலை திருவேங்கடம், அப்பகுதியிலுள்ள ஏரியில் ஆடுகளை மேய்க்கச் சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து கிராம மக்கள் ஏரியிலுள்ள குட்டையில் இறங்கி தேடியபோது, ஒரு ஆட்டு குட்டி இறந்த நிலையிலும், திருவேங்கடம் சடலமாக கிடப்பதையும் பார்த்து அன்றிரவு, 9:00 மணிக்கு மீட்டனர்.
தொடர்ந்து, வேலைக்கு சென்ற ரமேஷூம் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் தேடி வந்த நிலையில், நேற்று காலை, 8:00 மணியளவில் அதே ஏரியில் அவர் சடலமாக மிதப்பதை கண்டு மீட்டனர். திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.