திருப்பூர் : 'வேளாண் பட்ஜெட்டில் பல அறிவிப்பு இடம் பெற்றாலும், சந்தைக்கு ஏற்ற சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது' என விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டசபையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளண் பட்ஜெட்டில், பல கோடி ரூபாய் மதிப்பில் பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் 'கரும்பு, நெல்லுக்கான கொள்முதல் விலையில் திருப்தியில்லை; தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட விளை பொருட்களின் சாகுபடியை ஊக்குவிக்கவும், ஆண்டு முழுவதும் அவை கிடைப்பதற்கு வழிவகை ஏற்படுத்தவும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள அரசு, அவற்றின் சந்தை விலைக்கு உத்தரவாதம் கொடுக்கும் அறிவிப்பு எதுவும் வழங்கவில்லை' என்பது விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் நல்லசாமி கூறியதாவது: