கோவை : தமிழக அரசின் பட்ஜெட்டில் போதிய அறிவிப்புகள் இல்லாததால் வணிகர்களும், சிறு தொழில் துறையினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா:
மாநில வருவாய்க்கு அடிப்படை ஆதாரமாய் இருக்கும் வணிகர்களுக்கான வளர்ச்சி திட்டங்கள், தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து, இன்னும் விரிவான பட்ஜெட் ஒதுக்கீடு இருந்திருந்தால், வணிகர்களுக்கு மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.
தமிழக உணவு பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம்:
மதிப்பு கூட்டு வரி சட்டத்தின் வரி நிலுவைகளுக்கு, 'சமாதான்' திட்டம் அறிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. கோவை, விருதுநகர், வேலுார், கள்ளக்குறிச்சியில் தொழில் பூங்கா உருவாக்க, 410 கோடி ரூபாய் ஒதுக்கியதை வரவேற்கிறோம்.