காங்கேயம்: காங்கேயம் அருகே, 11 நாட்களுக்கு முன் மாயமான, அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர், நொய்யல் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் அரச்சலுாரை சேர்ந்தவர் கனகராஜ், 37; காங்கேயம் அரசு போக்குவரத்து பணிமனை தொழில் நுட்ப பணியாளர்.
மனைவி மற்றும் ஒரு மகனுடன், இரண்டு ஆண்டுகளாக, காங்கேயத்தில் ராஜிவ் நகரில் வசித்து வந்தார். கடந்த, 10ம் தேதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த
புகாரின்படி, காங்கேயம் போலீசார்
விசாரணை செய்தனர்.
இதில் கடந்த, 11ம் தேதி திட்டுப்பாறை பகுதியில் இருசக்கர வாகனத்தில் அவர் சென்றது. அப்பகுதியில் 'சிசிடிவி' காட்சிகளில் பதிவாகி இருந்தது. சிறிது துாரத்தில் வாகனம் மட்டும் ஒரு வாரமாக நிற்பதும் தெரிந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் மருதுறை அருகே குருக்கல்பாளையம் பகுதி நொய்யல் ஆற்றில், ஆண் சடலம் நேற்று மிதந்தது. அப்பகுதி மக்கள் தகவலின்படி காங்கேயம் போலீசார், சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில் மாயமான கனகராஜ் என்பது தெரிந்தது.
குடிப்பழக்கம் இருந்த நிலையில், மதுவில் விஷம் குடித்து இறந்தாரா அல்லது குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்ததில் இறப்பு நேரிட்டதா? அல்லது வேறு காரணமா என்று, காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.