குளித்தலை: குளித்தலை அருகே, தண்ணீர்பள்ளியில், 'நேச்சர் டிரஸ்ட்' தொண்டு நிறுவனம் சார்பில், உலக மகளிர் தின விழா நடந்தது. விழாவுக்கு குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார்.
'நேச்சர் டிரஸ்ட்' நிர்வாகி அபிராமி ஸ்ரீதர் பேசியதாவது:
பெண்களின் ஆரோக்கியத்தை பேணி காப்பது இன்றைய சூழலில் மிகவும் சவாலானது. பணி சுமை, குடும்ப பொறுப்பு, குடும்ப உறுப்பினர் நலன், குழந்தைகள் நலன், குழந்தைகள் கல்வி என, பல வகைகளில் பெண்கள் நேரத்தையும், உழைப்பையும் கொடுத்து கொண்டிருப்பதால், தங்கள் உடல் நலத்தையும் மன நலத்தையும் அவர்களால் கவனிக்க முடியவில்லை. எனவே, பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், 50 வகையான ஆரோக்கிய உணவு வகைகள், அடுப்பு, எண்ணெய் இல்லாமல் செய்து காட்டப்பட்டன.
மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுவினர், நேச்சர் டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.