கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட கிளை மற்றும் மாவட்ட பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், டவுன் பஞ்.,களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பதவி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் சக்திவேல், பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரவேல், மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் சேட்டு உள்பட பலர் பங்கேற்றனர்.