நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில் நடந்த ஏலத்தில், 2,800 மூட்டை மஞ்சள், ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
நாமகிரிப்பேட்டை பகுதியில், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு சொந்தமான மஞ்சள் மண்டி உள்ளது. இங்கு, வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடப்பது வழக்கம். நேற்று, 2,800 மூட்டைகள் வரத்தாகின. இதன் மூலம் மொத்தம், ஒரு கோடி ரூபாய்க்கு மஞ்சள் விற்பனையானது.
விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சமாக, 4,569 ரூபாய், அதிகபட்சமாக, 7,432 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை ரகம் குறைந்தபட்சமாக, 4,579 ரூபாய், அதிகபட்சமாக, 6,339 ரூபாய்க்கு விற்பனையானது. பனங்காலி, 4,569 லிருந்து, 11 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. விரலி, 1,700 மூட்டை, உருண்டை, 1,000, பனங்காலி, 100 மூட்டை என, 2,800 மஞ்சள் மூட்டைகள், ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையானது.