நாமக்கல்: பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கைக்கூப்பி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு அமாவாசை, பவுர்ணமி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு வருட பிறப்புகள், ஆஞ்சநேயர் ஜெயந்தி மற்றும் தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில், பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும்.
அந்த வகையில், பங்குனி மாத அமாவாசை தினமான நேற்று காலை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்பட்டும், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிேஷகங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து சுவாமி தங்கக்கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.