ஓமலுார்: 'திருப்தி' என மாற்றி, பெரியார் பல்கலை நிர்வாகம் டி.சி., வழங்கியதால், 4 மாணவியர் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம், கருப்பூர் பெரியார் பல்கலையில், எம்.ஏ., வரலாற்றுத்துறையில் படித்தபோது, 4 மாணவியர், அவர்கள் துறை சார்ந்த ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட பல்கலை நடவடிக்கைக்கு எதிராக, கலெக்டர் அலுவலகத்தில் பேட்டியளித்தனர். இதனால் அவர்கள் படிப்பு முடிந்ததும், டி.சி.,யின், 'நடத்தை' பகுதியில், 'திருப்தி இல்லை' என குறிப்பிடப்பட்டது. இதை வாங்க மறுத்து, பெற்றோருடன் மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரத்துக்கு பின், நேற்று மாணவியர் ஓவியா, சரண்யா, உஷா, ஜீவிதா ஆகியோரது, டி.சி.,யில், 'திருப்தி' என மாற்றி பதிவு செய்யப்பட்ட சான்றிதழை, பல்கலை நிர்வாகம் வழங்க, மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.