சேலம்: தாயிடம் பால் குடித்த பெண் குழந்தை இறந்தது.
சேலம், செவ்வாய்ப்பேட்டை ஜவுளி கடை ஆற்றோர வடக்கு தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார், 27. செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட்டில் மூட்டை துாக்கும் தொழிலாளியாக பணிபுரிகிறார். இவரது மனைவி மும்தாஜ், 24. இவர், 2017ல் மும்தாஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் பிரசாந்த், 5, மகள் பிரக்யா, 1.
நேற்று முன்தினம் மாலை, 5:15 மணிக்கு பிரக்யாவுக்கு மும்தாஜ், தாய்ப்பால் கொடுத்தார். சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, சேலம் அரசு மருத்துவ
மனையில் சேர்த்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை இறந்தது. வசந்தகுமார் புகார்படி செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்தனர். அதில் தாய்ப்பால் மூக்கில் ஏறி வயிற்றில் உறைந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.