சேலம்:சேலத்தில், 80 வயது மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இரு வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பெரியசோரகை கிராமத்தைச் சேர்ந்த, 80 வயது மூதாட்டி, 2021ம் ஆண்டு அக்., 24ல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு வாலிபர்கள், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஓமலுார் மகளிர் போலீசார் சீனிவாசன், 20, விக்னேஷ், 23, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.