47 வயதில் பெண் குழந்தை பெற்ற நடிகை ஆர்யா பார்வதியின் தாய் வெட்கப்படவில்லை என்று பதிவு | கன்னியாகுமரி செய்திகள்| Actress Arya Parvathys mother who gave birth to a baby girl at the age of 47 is not ashamed | Dinamalar
47 வயதில் பெண் குழந்தை பெற்ற நடிகை ஆர்யா பார்வதியின் தாய் வெட்கப்படவில்லை என்று பதிவு
Added : மார் 23, 2023 | |
Advertisement
 

நாகர்கோவில்:கேரளாவில் முன்னணி நடிகை ஆர்யா பார்வதி 23,யின் தாய் தீப்தி 47 வயதில் பெண் குழந்தை பெற்றெடுத்தார். முதலில் அதிர்ச்சி அடைந்த நான் தற்போது வெட்கப்படவில்லை என்று நடிகை பதிவிட்டுள்ளார்.

ஆர்யா பார்வதியின் தாய் 47 வயதில் கர்ப்பமானார். இது குறித்து நடிகை வெளியிட்ட பதிவு: தாய் கர்ப்பமான செய்தி அறிந்து முதலில் அதிர்ச்சி அடைந்தேன், ஆனால் பெற்றோர் தயங்கி தயங்கி கூறியதை பார்த்த போது யதார்த்தத்தை புரிந்து கொண்டு நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். இவ்வாறு கூறிய பதிவில் தாய் வயிற்றில் தன் தலையை வைத்து போட்டோ வெளியிட்டார்.

தற்போது நடிகைக்கு தங்கை பிறந்துள்ளதையும், தான் ஒரு பெரிய அக்கா ஆகியுள்ளதாகவும் அவரே பதிவு மூலம் வெளியிட்டுள்ளார். எனக்கு இளைய சகோதரி வந்து விட்டாள், மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

நடிகையின் பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் நாகர்கோவில் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X