நாகர்கோவில்:கேரளாவில் முன்னணி நடிகை ஆர்யா பார்வதியின் தாய் தீப்தி, 47 வயதில் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
'முதலில் அதிர்ச்சி அடைந்த நான் தற்போது வெட்கப்படவில்லை' என்று ஆர்யா பதிவிட்டு உள்ளார்.
கேரள முன்னணி நடிகை ஆர்யா பார்வதி, 23. இவரது தாய் தீப்தி, 47 வயதில் கர்ப்பம் ஆனார்.
இது குறித்து நடிகை வெளியிட்ட பதிவில், 'தாய் கர்ப்பமான செய்தி அறிந்து முதலில் அதிர்ச்சி அடைந்தேன். பெற்றோர் தயங்கி தயங்கி கூறிய போது, யதார்த்தத்தை புரிந்து கொண்டு, 'நான் ஏன் வெட்கப்பட வேண்டும்' என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்' என்று கூறியுள்ளார்.
இவ்வாறு கூறிய பதிவில், தாய் வயிற்றில் தன் தலையை வைத்து, புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.
தற்போது, நடிகைக்கு தங்கை பிறந்துள்ளதையும், தான் ஒரு பெரிய அக்கா ஆகியுள்ளதாகவும், அவரே பதிவு மூலம் வெளியிட்டுள்ளார்.
நடிகையின் பதிவுக்கு, பல தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.