பைனான்ஸ் நிறுவனம் தொல்லை ஜாமின் அளித்தவர் தற்கொலை
Added : மார் 23, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



திண்டிவனம், : திண்டிவனத்தில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் கெடுபிடியால் மன உளைச்சலுக்கு ஆளான டிரைவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சுந்தரமவுலி தெருவை சேர்ந்தவர் விநாயகம் மகன் சடகோபன்,46; டிரைவர்.

இவர், தனது நண்பரான, திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுந்தரம்,45; என்பவருக்கு, கடந்த 2012ல் கார் வாங்குவதற்காக, 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஜாமின் கையெழுத்து போட்டுள்ளார். கடந்த 2017 வரை கடன் தொகை கட்டியதாக தெரிகிறது.

2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிலுவை உள்ளதால், அதற்கு வட்டி மற்றும் அசல் என தற்போது வரை ரூ. 10 லட்சம் ரூபாய் தனியார் பைனான்ஸ் நிறுவனம் கேட்டு, ஜாமின் கையெழுத்து போட்ட சடகோபனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையே, சடகோபன் அதே பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று இரண்டு கார்கள் வாங்கி, கடன் தொகையை முழுவதுமாக கட்டி முடித்த நிலையில், என்.ஓ.சி., தராமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சடகோபன், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் பக்கத்தில் உள்ள மற்றொரு பாழடைந்த வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சடகோபனின் உறவினர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X