திண்டுக்கல்-திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், என்.பி.ஆர். கல்வி குழுமம் நடத்திய என்.பி.ஆர். கோப்பைக்கான கல்லுாரிகளுக்கான கிரிக்கெட் லீக் போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என். கலை கல்லுாரி வெற்றி பெற்றது.
என்.பி.ஆர். மைதானத்தில் நடந்த அரையிறுதி முதல் போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என். கலை கல்லுாரி 45 ஓவரில் 8 விக்கெட் இழந்து 312 ரன்கள் எடுத்தது.
கவுதம் 144, சந்துரு 34, நவீன்குமார் 42ரன்கள், நரேன்குமார் 3, வேல்முருகன் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.ஐ.இ.டி. அணி 20.3 ஓவரில் 82 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. திண்டுக்கல் ஜி.டி.என். கலை கல்லுாரி அணியின் சந்துரு 5 விக்கெட்எடுத்தார்.
அரையிறுதி 2ம் போட்டியில் திண்டுக்கல் என்.பி.ஆர். அணி 32.5 ஓவரில் 150 ரன்கள் எடுத்துஆல் அவுட்டானது. சரண்சக்திவேல் 58ரன்கள், அரவிந்த் 4, மதுசூதனன் 4 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்ததிண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. அணி 41.1 ஓவரில் 138 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. மனோஜ்குமார் 36, தினேஷ் 33ரன்கள் எடுத்தனர்.
திண்டுக்கல் என்.பி.ஆர். அணியின் மகேஸ்வரன் 5 விக்கெட் எடுத்தார். இறுதி போட்டியில் திண்டுக்கல் என்.பி.ஆர்.அணி 38.1 ஓவரில் 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிஷேக் 3, மணிகண்டன் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்ததிண்டுக்கல் ஜி.டி.என்.கலை கல்லுாரி அணி 16 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்து வென்றது.
சஞ்சய்வெங்கடேஷ்வர் 32 ரன்கள் எடுத்தார்.
இதில் திண்டுக்கல் ஜி.டி.என். கலை கல்லுாரி முதலிடம், நத்தம் என்.பி.ஆர். கல்லுாரி 2ம் இடம்பிடித்தது. சிறந்த பேட்ஸ்மேனாகஜி.டி.என்.கலை கல்லுாரி கவுதம்,
சிறந்த பந்து வீச்சாளராக சந்துரன் அறிவிக்கப்பட்டனர்.