ஆசிரியர்களுக்கு விழுகிறது அடி: பாடம் எடுக்க வேண்டியது யாருக்கு?
Updated : மார் 23, 2023 | Added : மார் 23, 2023 | கருத்துகள் (39) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

கோவை: துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், இரண்டாம் வகுப்பு மாணவரை அடித்த ஆசிரியரை, குழந்தையின் பெற்றோர் அடிக்கும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாணவர்களை பிரம்பால் ஆசிரியர்கள் கண்டிக்க தடை நீடிப்பதால், ஒழுங்கீனம், கீழ்ப்படியாமை அதிகரித்து வருகிறது. தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆசிரியர்கள், மாணவர்களை எப்படி கையாள்வதென தெரியாமல் கைகளை பிசைகின்றனர்.



latest tamil news



துாத்துக்குடி மாவட்டம், கீழநம்பிபுரம் இந்து தொடக்கப்பள்ளியில், எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சிக்குப் பின், மாணவர்களை ஒருங்கிணைத்த ஆசிரியர் ஒருவர், இரண்டாம் வகுப்பு படிக்கும், மாணவர் ஒருவரை கன்னத்தில் அடித்ததாகவும், வலி தாங்க முடியாமல், மாணவர் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதை கண்டித்து, குறிப்பிட்ட மாணவரின் பெற்றோர் மற்றும் தாத்தா ஆகிய மூவர் பள்ளிக்கு வந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரை அடித்து, மைதானத்தில் கீழே தள்ளும் காட்சிகள், ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் அளித்த புகாரின் பேரில், ஆசிரியரை தாக்கிய மூவர், கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும், பள்ளி வளாகத்திற்குள்ளே ஆசிரியரை அடித்தது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. பணி பாதுகாப்பு சட்டம் இயற்றாததால்தான், ஆசிரியர்களின் நிலை படுமோசமாக மாறி வருவதாக, பலரும் ஆதங்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு கூறுகையில், ''பள்ளி வளாகத்திற்குள்ளே வந்து, பணியில் இருக்கும் ஆசிரியரை சக மாணவர்கள் முன்னிலையில், பெற்றோர் ஒருமையில் பேசுகின்றனர்; திடீரென அடிக்கின்றனர்.

இது போன்ற செயல்பாடுகளால், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. தவறு செய்த மாணவரை கண்டிக்க கூடாதென்றால், பள்ளிக்கூடங்கள் நடத்தி, நன்னெறியையும், ஒழுக்கத்தையும் போதிக்கவே முடியாது.
வெறுமனே பாடத்தை மட்டும் நடத்துவது தான், ஆசிரியர்களின் பணியா என்ற கேள்வி எழுகிறது. ஆசிரியரை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதை கண்டித்து, விரைவில் போராட்டம் அறிவிக்க, முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.






மாணவரை அடித்தது சரியா?




குழந்தைகள் மற்றும் பொது மனநல ஆலோசகர் கவிதா ஜனார்த்தனன் கூறியதாவது:
இரண்டாம் வகுப்பு படிக்கும், மாணவரை கன்னத்தில் அடித்ததாக, வீடியோவில் காட்டப்படுகிறது. எந்த பெற்றோராக இருந்தாலும், ஆத்திரம் வருவது இயல்புதான்.
இதற்காக ஆசிரியரை அடிக்காமல், கேள்வி எழுப்பியிருந்தால், உரிய ஆசிரியர் தற்போது குற்றவாளியாகி இருப்பார். தொடக்க வகுப்பு குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டுமென, ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். பதின்பருவ மாணவர், ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டால், அடிக்கும் ஆசிரியரை இந்த சமூகம் வரவேற்கிறது. கண்டிப்பை காட்டினால்தான், தவறு செய்யும் மாணவர்கள் திருந்துவர்.

சமீபத்தில் தர்மபுரி மாவட்டம், மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், செய்முறை தேர்வுக்கு பின், வகுப்பறையை சேதப்படுத்திய மாணவர்கள் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால் சில ஆசிரியர்கள், மாணவர்களை சரியாக கையாளாமல், அடிப்பது தொடர்கிறது. தவறே செய்தாலும், கண்டிப்பை வெளிப்படுத்தும் முறையில்தான், மாணவர்கள் மனம் திருந்துவர்.


அடிப்பது மட்டுமே கண்டிக்கும் வழிமுறை அல்ல. சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே, சிறந்த மாணவர்கள் உருவாவர். சிறந்த ஆசிரியர் என்பவர், நல்ல பெற்றோரின் குணநலன்களை கொண்டிருப்பது அவசியம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.



களங்கப்படுத்தலாமா?




ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'என்னதான் இருந்தாலும், பாடம் கற்பிக்கும் ஆசிரியரை, அவரிடம் கற்கும் மாணவர்கள் முன்னிலையில், பெற்றோர் தாக்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதன் வாயிலாக, தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர், பெரும் துரோகம் செய்கின்றனர்.குழந்தை ஒழுக்க நெறி தவறுவதையும், ஆசிரியர் மீது தாக்குதல் நடத்துவதையும் ஊக்குவிப்பது தொடர்ந்தால், நாளைய சமுதாயத்துக்கு ஒரு சிறந்த குடிமகனை, அந்த பெற்றோரால் அளிக்க முடியாது. இதை, ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டியது அவசியம்' என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (39)
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
24-மார்-202315:56:29 IST Report Abuse
Neutrallite ஐந்து வயது வரை கொஞ்சுங்கள். அடுத்த பத்து ஆண்டுகள் அடியுங்கள், வேலைக்காரனை போல் நடத்துங்கள். அதன் பிறகு நண்பனாக நடத்துங்கள் என்கிறது நம் நாட்டு பழைய பாடல் ஒன்று. Spare the rod and spoil the child என்கிறது அயல்நாட்டு பழமொழி. கண்டித்தலும், பயமும் தான் பெரியவர்களையே சட்டப்படி நடக்க செய்ய முடியும், ஒரு சிலர் மட்டும் தான் பொறுப்புணர்ந்து தானாக வழி பேணுவர்.
Rate this:
Cancel
Radj, Delhi - New Delhi,இந்தியா
23-மார்-202321:16:18 IST Report Abuse
Radj, Delhi எது செய்ய வேண்டும் செய்ய கூடாது என்று வரை முறை இருக்கும் போது எப்படி ஆசிரியர் தான்தோன்றித்தனமாக எப்படி செயல் பட முடியும். அந்த ஆசிரியரையும் மற்றும் தலைமை ஆசிரியரையும் பணி இடைநீக்கம் செய்யவேண்டும்.
Rate this:
Cancel
sridharan RAMDAS - Edmonton,கனடா
23-மார்-202320:43:36 IST Report Abuse
sridharan RAMDAS இங்கு கனடாவில் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிப்பதில்லை. ஆசிரியர்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து நண்பர்களைப்போல் பேசுகிறார்கள். அப்படியே பாடத்தையும் சொல்லி கொடுக்கிறார்கள். இந்த பழக்கம் ஐந்தாம் வகுப்பு வரை நடை முறையாக இருக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரை ஒரு வகுப்பிற்கு ஒரே ஆசிரியர் எல்லா பாடங்களையும் சொல்லி தருகிறார். பாடம் மட்டும் சொல்லி தராமல் பல உலக விஷயங்களையும் பற்றி பேசுகிறார்கள். மற்றவரின் கருத்துக்களுக்கு மரியாதை கொடுப்பது எப்படி, யார் எதை சொன்னாலும் உண்மை அறிவது எப்படி, மற்றவர்கள் தவறு செய்தால் அதை எப்படி அணுகுவது, கருது வேறுபாடுகளை எப்படி பேசி தீர்க்க வேண்டும், சில கருத்து வேறுபாடுகள் இர்ருக்கத்தான் செய்யும் அதை எப்படி கையால்வது என்பது போன்ற பல விஷயங்களை சொல்லி கொடுக்கிறார்கள். என் மகன் இராண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது "என் ஆசிரியர் மிஸ்டர் பி எனக்கு மிகவும் பிடிக்கும்" என்பான். சிலர் மிகவும் குறுப்பு தனமாக இருந்தால் அவர்களை பற்றி பெற்றோடம் சொல்லி மெதுவாக சரி செய்கிறார்கள். மிரட்டும் தொனியில், அதிகார தொனியில் குழந்தைகளிடம் பேசுவதில்லை. சிறு சிறு தவறுகளை பெரிது படுத்தாமல் "உங்கள் பிள்ளை மிகவும் கெட்டிக்காரன், மிகவும் புத்திசாலி" என்று பெற்றோரின் முன் புகழ்கிறார்கள். பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள். இது போன்று நாமும் நம்முடைய கற்பித்தல் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X