கலசப்பாக்கம் : துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு பெற்றோரை மிரட்டிய மகனை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் மணிகண்டன், 30, இவருக்கு கடன் தொல்லை இருந்த நிலையில், தன் பெற்றோரிடம் பணம் கேட்டு வந்தார்.
அவர்கள் பணம் தர மறுத்து, சொத்தும் எழுதி தரவில்லை. ஆத்திரமடைந்த மணிகண்டன், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை வைத்து, சில நாட்களாக தன் பெற்றோரை மிரட்டி பணம் கேட்டு வந்தார்.
இதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி கடலாடி போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்து, மணிகண்டனை கைது செய்து, அவரிடமிருந்து உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.