திருச்சி : திருச்சி அருகே, காவிரி ஆற்றில் குளித்த பாரத ஸ்டேட் வங்கி மேனேஜர், தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
அணையின், 36வது மதகில், அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக இருவரும் நீரில் மூழ்கி விட்டனர். அருகில் இருந்தவர்கள், ஸ்ரீனிவாசனை காப்பாற்றி விட்டனர். ஆனால், ராஜசேகரை மீட்க முடியவில்லை.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர், அரைமணி நேரம் தேடி, ராஜசேகர் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து, வாத்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.
இறந்த ராஜசேகருக்கு, ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.