தென்காசி : தென்காசி அருகே, சொத்துக்காக தாயை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மகன் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக, ௩ம் தேதி முருகம்மாள், அவரது இளையமகன் உதயமூர்த்தியுடன் 'பைக்'கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கின் பின்னால் காரில் வந்த, முருகம்மாளின் மூத்த மகன் மோகன், பைக் மீது காரை மோத செய்து, முருகம்மாளை கொலை செய்தார். உதயமூர்த்தி படுகாயமடைந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, இலத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிய மோகனை தேடி வந்தனர்.
இந்நிலையில், இலத்துார் போலீசார், வாகன சோதனையின் போது பிடிபட்ட மோகனை கைது செய்தனர்.