வேலுார் : குடியாத்தம், ராணிப்பேட்டையில் ராணுவ வீரர் உள்ளிட்ட இரண்டு பேரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ், 24. இவர், பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, தனிமையில் இருந்துள்ளார். இதில் மாணவி மூன்று மாத கர்ப்பமானார்.
இந்நிலையில், மோகன்தாசுக்கு ராணுவத்தில் பணி கிடைத்து அசாமிலுள்ள ராணுவ பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார். மாணவி கர்ப்பமாக இருக்கும் விபரத்தை, மாணவியின் பெற்றோர் தெரிவித்தும், மாணவியை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்.
மாணவியின் பெற்றோர் புகார் படி, குடியாத்தம் மகளிர் போலீசார், போக்கோவில் மோகன்தாசை நேற்று கைது செய்து, வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே நான்காம் வகுப்பு படிக்கும், 10 வயது மாணவியை அதே பகுதியை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுவன், பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
புகார் படி, ராணிப்பேட்டை மகளிர் போலீசார் நேற்று, போஸ்கோவில் சிறுவனை கைது செய்து, வேலுார் அரசு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.