நெற்குன்றம் : வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் 148வது வார்டு அலுவலகம், மீனாட்சியம்மன் நகரில் உள்ளது. இதில், கவுன்சிலர் மற்றும் உதவி பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு, போதிய இட வசதியில்லாததால், சுகாதாரம், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து, இந்த அலுவலகம் அருகே, புதிதாக கட்டடம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. கவுன்சிலர் நிதி 35 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு மாடி கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த கட்டடத்தில், வரி வசூலிப்பாளர், சுகாதாரம் மற்றும் துப்புரவு ஆய்வாளர், 'இ - சேவை' மையம் உள்ளிட்டவை இயங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.