சோழவரம் : அம்பத்துார் அடுத்த, கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 60. இவர் அலமாதி பால்பண்ணையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவருக்கு, சோழவரம் அடுத்த எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த எஸ்தர், 48, என்பவருடன் 'தொடர்பு' இருந்தது. இது தொடர்பாக, எஸ்தரின் மருமகன் மணிகண்டன், 28, மற்றும் முத்துகிருஷ்ணன் இடையே அடிக்கடி பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று மாலை, மணிகண்டன், அவரது மனைவி மற்றும் மாமியாருடன் வீட்டில் இளநீர் வெட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த முத்துகிருஷ்ணனுக்கும், மணிகண்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், கையில் வைத்திருந்த இளநீர் வெட்டும் கத்தியால், முத்துகிருஷ்ணனை தலையில் வெட்டினார். பலத்த காயம்வ அடைந்த அவர், அதே இடத்திலே இறந்தார்.
சோழவரம் போலீசார், முத்துகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி, தலைமறைவான மணிகண்டனை தேடுகின்றனர்.