கோபி: கூகலுார் கிளை வாய்க்காலில், ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து துர்நாற்றம் வீசுகிறது.
பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனமாக, 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. தடப்பள்ளி வாய்க்காலில், மொத்தமுள்ள 78 கி.மீ., தொலைவில், 36வது கி.மீ., தொலைவில், பாரியூர் அருகே உருளை என்ற இடத்தில், கூகலுார் கிளை வாய்க்கால் பிரிகிறது. இதன் மூலம், 21 கி.மீ., தொலைவுக்கு, மொத்தம் 3,200 ஏக்கர் பாசனம் பெறுகிறது.
இந்நிலையில் கடந்த, 3 முதல், பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது. தற்போது பாரியூர் அருகே செல்லும், கூகலுார் கிளை வாய்க்காலில், ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதே சமயம் அங்கு குட்டையாக தேங்கி நிற்கும் நீரால் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பொதுப்
பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கீரிப்பள்ளம் ஓடை குறுக்கே, விரைவில் பாலம் கட்டுமான பணி நடக்கவுள்ளது. அந்த சமயத்தில் ஆகாயத்தாமரை அகற்றி சுத்தம் செய்ய வழிவகை செய்யப்படும்'
என்றனர்.