சென்னிமலை: சென்னிமலை யூனியன், வாய்ப்பாடி ஊராட்சி செயலரை கண்டித்து, துணைத்தலைவர் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.
சென்னிமலை யூனியன், வாய்ப்பாடி ஊராட்சி துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் விஜயலட்சுமி. இங்கு பணிபுரியும் ஊராட்சி செயலர் சிவராஜ், துணைத் தலைவரின் டிஜிட்டல் கீயை சில மாதங்களுக்கு முன்பு, சாப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டும் என கூறி பெற்றுள்ளார். அதை துணை தலைவர் பலமுறை கேட்டும் திருப்பு தரவில்லை.
இந்நிலையில், ஊராட்சி ஒன்பதாவது நிதி வங்கி கணக்கில் உள்ள தொகையை துணை தலைவருக்கு தெரியப்படுத்தாமல், ஒப்பந்ததாரருக்கு பணம் பரிவர்த்தனை செய்துள்ளார். மேலும், நேற்று துணைத் தலைவர் விஜயலட்சுமி, டிஜிட்டல் கீ கேட்டபோது அவரை அலுவலகத்துக்குள் அனுமதிக்காமல், ஊராட்சி செயலர் சிவராஜ் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இதை கண்டித்து அலுவலகம் முன், துணைத் தலைவர் விஜயலட்சுமி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், சென்னிமலை பி.டி.ஓ., குணசேகரன், போலீஸார் வாய்ப்பாடி ஊராட்சி அலுவலகம் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட துணைத்தலைவர் விஜயலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.