கரூர்:கரூர் மாவட்டத்தில், இ-சேவை மையம் தொடங்க விரும்புவோர் வரும் ஏப்.,14 வரை விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் வகையில், இ--சேவை மையங்களை தொடங்க வாய்ப்பு அளிக்கப்படும். இதில், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ--சேவை மைய சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அனைவருக்கும் இ--சேவை மையம் திட்டம் வாயிலாக மையங்களை
தொடங்கலாம்.
இதற்கு, https://www.tnesevai.tn.gov.in/ அல்லது https://www.tnega.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்., 14 வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இ--சேவை மையத்தை செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம், 3000 ரூபாய், நகர்ப்புறத்துக்கான கட்டணம், 6000 ரூபாய், விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பதாரருக்கு உரிய பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவை விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.