குளித்தலை: குளித்தலை அருகே, மேலகுட்டப்பட்டியில் பா.ஜ., சார்பில் கொடியேற்று விழா மற்றும் சக்தி கேந்திரா ஆய்வு கூட்டம் நடந்தது.
ஒன்றிய பா.ஜ., தலைவர் பொன் ரஞ்சித்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் கலந்துகொண்டு, கட்சி கொடியேற்றினார். தொடர்ந்து ஆய்வு கூட்டத்தில், சக்தி கேந்திரா செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, மத்திய அரசின் சாதனைகளை கிராமங்கள்தோறும் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகித்தும், தெருமுனை கூட்டம் நடத்தியும் மோடி அரசின் சாதனைகளை விளக்க வேண்டும் என, மாவட்ட தலைவர் செந்தில்நாதன் வலியுறுத்தினார். பின், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை கட்சி நிர்வாகிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜகோபால், குளித்தலை நகர தலைவர் கணேசன், நகர
பொதுச்செயலாளர் கண்ணன், இளைஞர் அணி தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.