கிருஷ்ணராயபுரம்: வல்லம் கிராம சாலையில் குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த வல்லம் கிராம சாலை வழியாக பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், வல்லம் சாலையில் குடிநீர் குழாய் விரிசல் ஏற்பட்டு தினமும் தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது.
கோடைகாலத்தில் தண்ணீர் வீணாவதோடு, சாலையும் சேதமடைந்து வருகிறது. மேலும், கிராம மக்களுக்கும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, குடிநீர் குழாயை சீரமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.