கரூர்: கரூரில், ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம், நாளை நடக்கிறது என, சுகாதார துறை துணை இயக்குனர் (குடும்ப நலம்) ஸ்ரீபிரியா தேன்மொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரூர் அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனையில், ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம், நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில், கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக 1,100- ரூபாய், ஊக்குவிப்பாளர்களுக்கு 200 ரூபாய் மற்றும் மாவட்ட நிர்வாக
பங்களிப்பு, 3,900 ரூபாய் என பயனாளிக்கு மொத்தம், 5,000 ரூபாய் வழங்கப்படும் அல்லது ரூ.1,100 மட்டும் பெறும் பயனாளிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரையறுக்கப்பட்ட ஏதேனும் ஒரு நலத்திட்ட உதவி வழங்கப்படும்.
---இந்த சிகிச்சையானது ஓரிரு நிமிடங்களில், மயக்க மருந்து கொடுக்கப்படாமல் செய்யப்படும். சிகிச்சை முடிந்த பிறகு வீட்டுக்கு செல்லலாம். சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பம் உள்ள ஆண்கள், நவீன குடும்பநல கருத்தடை செய்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.