மூத்த தம்பதியை மிரட்டி 80 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை முகமூடி கும்பல் அட்டகாசம் | கிருஷ்ணகிரி செய்திகள்| 80 pounds, Rs. 3 lakh robbery masked gang threatens elderly couple | Dinamalar
மூத்த தம்பதியை மிரட்டி 80 பவுன், ரூ.3 லட்சம் கொள்ளை முகமூடி கும்பல் அட்டகாசம்
Added : மார் 23, 2023 | |
Advertisement
 


கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, வயதான தம்பதியரை மிரட்டி, 80 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற, முகமூடி திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சப்பானிப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி, 88; ஓய்வுபெற்ற ஆசிரியர்; இவரது மனைவி சென்னம்மாள், 77; நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் முகமூடி போல், கருப்பு துணியை கட்டிக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள், வயதான தம்பதியை கத்தி முனையில் மிரட்டி வீட்டிலிருந்த, 80 பவுன் நகைகள், இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள், மூன்று லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர். அவற்றின் மொத்த மதிப்பு, 35 லட்சம் ரூபாயாகும்.

இது குறித்து ரங்கசாமி புகார்படி, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X