ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த, புத்திரகவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த, உதயகுமார் மனைவி விஜயா, 67. இவர், அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இன்று, கடைக்கு வந்த 28 வயது ஆண், 25 வயது பெண் ஆகியோர், முத்துமலை முருகன் கோவிலுக்கு வந்ததாகவும், குளிர்பானம் கேட்டுள்ளனர்.
வீட்டிற்குள் சென்று வந்த விஜயாவை, இருவரும் பின் தொடர்ந்துசென்றுள்ளனர். பின், விஜயாவை தாக்கியதுடன், காதை அறுத்துள்ளனர். கழுத்தில் இருந்த மூன்று பவுன், ஒரு பவுன் தோடு என, பிடிங்கி சென்றுள்ளனர். மூதாட்டி விஜயாவுக்கு, இடதுபுற காதில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஏத்தாப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.