ராஜபாளையம்,:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டர்களை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம் அருகே அரசியார்பட்டியில் 288 காஸ் சிலிண்டர்களை கேரளாவில் இருந்து கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராஜபாளையம் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் அப்பகுதி குடோனை ஆய்வு செய்தனர்.
இதில் ஆவணங்களின்றி, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 காஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.
குடோன் உரிமையாளர் மலைக்கனியிடம் விசாரணை செய்கின்றனர்.