திருச்சி:தமிழக போலீஸ் துறையில் பெண்கள் பணியில் சேர்ந்து, 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, பொன்விழா கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, சென்னையில் இருந்து, 175 பெண் போலீசார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி வரை செல்லும் அவர்கள், நேற்று முன்தினம் காலை திருச்சி மாவட்ட எல்லையை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்ற திருச்சி எஸ்.பி., சுஜித்குமார், அவர்களுடன், தானும் சைக்கிளில், திருச்சி மாவட்ட எல்லை வரை சென்று, வழியனுப்பி வைத்தார்.
திருச்சியில் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு வந்த பெண் போலீசாருக்கு, சாலையின் இருபுறமும் நின்று, போலீசார் கைதட்டி, உற்சாகப்படுத்தி, சிறப்பான வரவேற்பும் அளித்தனர்.