தி.மு.க.,வை பொறுத்த வரை, கட்சியில் இணைந்து தேர்தலில் சீட் பெற வேண்டும் என்றால், கட்சி வளர்ச்சிக்கு பெரும் தொகையை நிதியாக தர வேண்டும் என கூறி விட்டனர். இதனால், அவர்கள் அ.தி.மு.க.,வில் இணைய முயற்சிக்கின்றனர்.
இவர்களுக்காக, டில்லியில் இருந்து தமிழகம் வந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர், சேலத்தில் பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். 'எத்தனை பேர் வேண்டுமானாலும் இணையட்டும். அது கட்சிக்கு நல்ல பெயரை ஏற்படுத்தும். அதே நேரம், எல்லாருக்கும் சீட் கொடுக்க முடியாது; ஓரிருவருக்கு மட்டும் கொடுக்க முடியும். அதிலும் யாருக்கு என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.
'கட்சி வளர்ச்சிக்கு பணம் வேண்டாம். தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கப்படும்' என, பழனிசாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு அதிகாரியாக செயல்பட்டவர்களும் அரசி யலுக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக, மலைச்சாமி, நட்ராஜ் போன்றோரை கட்சியில் இணைத்து, சீட் கொடுத்தார் ஜெயலலிதா.
மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் சந்தோஷ்பாபு, ஏ.ஜி.மவுரியா உள்ளிட்டோர் இணைந்து, தேர்தலில் போட்டியிட்டனர். இந்த விஷயத்தில் ஜெயலலிதா வழியில் செயல்பட பழனிசாமி விரும்புகிறார். டில்லி பத்திரிகையாளர் முயற்சி வெற்றி பெற்றால், 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், வட மாநிலங்களில் ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றும்
தமிழர்களில் சிலர், அ.தி.மு.க.,வில் இணைவர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. -- நமது நிருபர் --