பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, டி.கோட்டாம்பட்டி அண்ணா நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ், 49. இவரது அம்மா பங்காரு அம்மாள் என்ற நாச்சம்மாள், 65, என்பவரை காணவில்லை என மகாலிங்கபுரம் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். அதில், நாச்சம்மாள், அவரது தோட்டத்தின் அருகே உள்ள பழைய மோட்டார் அறையில் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, மகாலிங்கபுரம் போலீசார், காணவில்லை வழக்கை, தற்கொலை வழக்காக மாற்றம் செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.