காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக, இயற்கை உரங்களை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுபடுத்தலாம் என, வேளாண் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முனைவர் பா. இளங்கோவன் கூறியதாவது:
தமிழகத்தில், மோனோ குரோட்டோபாஸ் உள்ளிட்ட ஆறு விதமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு, அரசு தற்காலிக தடை விதித்து உள்ளது. இதுதவிர, மஞ்சள் பாஸ்பரஸ் என்னும் ஒட்டு பசை எலிக்கொல்லி மருந்திற்கு, அரசு நிரந்தர தடை விதித்து உள்ளது.
மேலும், நெற்பயிரில் ஏற்படும் பூச்சி தாக்குதலை, விளக்குப்பொறி, மஞ்சள் வண்ணப்பொறி, இனக்கவர்ச்சி பொறி, வரப்பு ஊடுபயிர் சாகுபடி, 3 சதவீதம் வேப்ப எண்ணெய், 6 சதவீதம் இலுப்பை எண்ணெய், 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு ஆகியவை பயன்படுத்தி பூச்சிகளை இயற்கையாக கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.