உடுமலை: தாராபுரம், காளிபாளையத்தை சேர்ந்தவர், ரமேஷ், 38. சுக்கு காபி நிறுவனம் நடத்தி வருகிறார். அவர், திருச்செந்துார் பகுதியை சேர்ந்த, அய்யப்பனிடம், கற்கண்டு வாங்கியதில், ரூ. 1.90 லட்சம் கடன் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம், உடுமலை பகுதிகளில், சுக்கு காப்பி சப்ளை செய்ய, ஆம்னி வேனில், டிரைவர் அப்துல்லா, சேல்ஸ் மேன் ரிஷி ஆகியோர் வந்துள்ளனர்.
இந்திரா நகர் அருகே, அய்யப்பன் மற்றும் இருவர், உரிமையாளர் ரமேஷ் வாங்கிய தொகையை வழங்காததால், வாகனத்துடன், இருவரையும் கடத்திச்சென்றுள்ளார்.
இது குறித்து, ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, துாத்துக்குடி, திருசெந்துார், குலசேகரம்பட்டியை சேர்ந்த அய்யப்பன், 36, செல்வரமணி,25, அசோக்குமார், 29 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.